

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அவ்வபோது விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு எடுக்கும் இந்த நடவடிக்கையை பெற்றோர்கள் வரவேற்றாலும், தொடர் விடுமுறையால் பாடத்திட்டம் பாதிக்கப்படுமோ என்ற கவலையும் எழுகிறது.
கொரோனா காலத்தில் அறிமுகமான ஆன்லைன் வகுப்புகளை மழைக்காலத்திலும் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறையே சிறந்தது என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
மழை காலத்தில் விடுமுறை மட்டுமே தீர்வா அல்லது கற்றலை தொடர ஆன்லைன் வகுப்புகள் அவசியமா என்பது குறித்து மாலைமலர் சார்பில் பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில், மழைக்காலத்தில் விடுமுறை விடுவதே சிறந்தது என்று 75 சதவீதம் பேரும், ஆன்லைன் கிளாஸ் வேண்டும் என்று 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
யூடியூபில் நடத்திய கருத்துகேட்பில், விடுமுறை வேண்டும் என்று 69 சதவீம் பேரும், ஆன்லைன் கிளாஸ் வேண்டும் என 17 சதவீத பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் விடுமுறை போதும் என 48 சதவீதம் பேரும், ஆன்லைன் கிளாஸ் வேண்டும் என 48 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டரில் விடுமுறை போதும் என 67 சதவீதம் பேரும், ஆன்லைன் கிளாஸ் வேண்டும் என 33 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த மக்களின் நேரடி கருத்துகளை உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு இதோ.