2023 ரீவைண்ட்: பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடை பயணம்

ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார்.
2023 ரீவைண்ட்: பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" நடை பயணம்
Published on

பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால சாதனையை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் நோக்கில் "என் மண் என் மக்கள்" என்ற நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூலை மாதம் 18-ந்தேதி தொடங்கினார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

நகர பகுதிகளில் நடந்து 1700 கி.மீ. தூரமும் மற்ற பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் மூலம் 900 கி.மீ. தூரமும் யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்தார். 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், வருகிற ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது.

நான்கு கட்ட பாத யாத்திரை முடிவடைந்த நிலையில் ஐந்தாம் கட்டம் மற்றும் கடைசி கட்ட யாத்திரையை டிசம்பர் 16-ந்தேதி தொடங்கியுள்ளார். அடுத்த மாதம் 10-ந்தேதி யாத்திரையை நிறைவு செய்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com