ரூ. 35 விலையில் OTT பலன்களை வழங்கும் வி

இந்த செயலியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளை சேர்ந்த பல OTT தளங்கள் உள்ளன.
Vi Logo
Published on: 

வி நிறுவனம் இந்திய டெலிகாம் சந்தையில் புதிய டேட்டா வவுச்சரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 35 விலை கொண்ட இந்த வவுச்சர், பயனர்களுக்கு ஒரு வார காலத்திற்கு 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதனுடன், 28 நாட்களுக்கான OTT சந்தாக்களும் இதில் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா அளவு என்பது குறைவாகத் தோன்றினாலும், பயனர்கள் வழக்கத்தை விட மிக குறைந்த விலையில் OTT சந்தாக்களை பெற முடியும்.

வி ரூ. 35 டேட்டா வவுச்சர் விவரங்கள்:

ரூ. 35 விலை கொண்ட இந்த ரீசார்ஜ் வவுச்சரை, ஏற்கனவே உள்ள ப்ரீபெய்ட் திட்டத்துடன் கூடுதலாக (add-on) சேர்த்துக்கொள்ளலாம். இது உங்கள் சாதனத்தின் வசதிக்கேற்ப 1ஜிபி 4ஜி அல்லது 5ஜி டேட்டாவை 7 நாட்களுக்கு வழங்குகிறது.

7 நாட்களுக்குப் பிறகு மீதமுள்ள டேட்டா காலாவதியாகிவிடும். இந்த வவுச்சரின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 28 நாட்களுக்கான OTT சந்தாக்கள் கிடைக்கின்றன. எனவே, 1GB டேட்டாவுக்கான 7 நாள் காலம் முடிந்த பிறகும், OTT சந்தாக்கள் தொடர்ந்து 28 நாட்கள் வரை செல்லுபடியாகும்.

இந்த வவுச்சரின் மூலம், பயனர்கள் 'வி மூவிஸ் & டிவி' (Vi Movies & TV) செயலியில் உள்ள பிரீமியம் OTT தளங்களில் இரண்டை தேர்வு செய்துகொள்ளலாம். இந்தச் செயலியில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பல்வேறு பிராந்திய மொழிகளைச் சேர்ந்த பல OTT தளங்கள் உள்ளன.

OTT பலன்கள்:

இதில் சோனி லிவ், ஜியோ ஹாட்ஸ்டார், ஷீமாரோ, பிளேஃப்ளிக்ஸ் (Playflix) போன்ற பல தளங்கள் அடங்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த OTT தளங்களில் 28 நாட்களுக்கு தொடர்ந்து உள்ளடக்கங்களை ரசிக்கலாம். இந்த பிரீமியம் ஸ்ட்ரீமிங் வசதி மொபைல் சாதனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

மேற்கூறியபடி, இது ஒரு முழுமையான ரீசார்ஜ் திட்டம் அல்ல, மாறாக ஏற்கனவே உள்ள திட்டத்துடன் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு கூடுதல் (add-on) வவுச்சர் ஆகும். எனவே, இதைப் பயன்படுத்த, உங்களிடம் ஏற்கனவே செல்லுபடியாகும் ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருக்க வேண்டும்.

X