உலகெங்கிலும் Microsoft சேவைகள் திடீர் முடக்கம்.. லட்சக்கணக்கானோர் அவதி

மைக்ரோசாப்ட்டின் உள்கட்டமைப்பை சார்ந்திருந்த மூன்றாம் தரப்பு சேவைகளையும் பாதித்தது.
Microsoft
Published on: 
Summary

மைக்ரோசாப்ட் நிறுவன செயலிகளின் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் 365, அவுட்லுக், டீம்ஸ் மற்றும் பிற மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியதால் உலகெங்கிலும் பயனர்கள் அவதி அடைந்தனர்.

மேலும், இந்தத் முடக்கம், ஓபன் ஏஐ, ஆந்திரோபிக் ஏஐகள் மூலம் அவற்றை பயன்படுத்துவோரையும் பாதித்தது.

டவுன்டிடெக்டர் கண்காணிப்பக அறிக்கைபடி, இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் 1,38,058 பேருக்கு அவுட்லுக் செயலிழப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாலை 4.30 மணியளவில் அந்த புகார்கள் 34,490 ஆகக் குறைந்தன.

அதிகாலை 3.30 மணிக்கு வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாதிக்கப்பட்ட சர்வர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பயனர்கள் மீண்டும் இணைந்தவுடன் சேவைகள் படிப்படியாக மீண்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இதன் தாக்கம் வணிக நிறுவனங்களையும் பாதித்தது.

விளக்கம்

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அளித்த விளக்கத்தில், தானியங்கு செயல்திறன் சோதனைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து பல சர்வர்கள் எதிர்பாராதவிதமாக செயலிழந்ததால், நிறுவனத்தின் உள்கட்டமைப்பின் சில பகுதிகளில் சுமை அதிகரித்தது.

இதனால், மீதமுள்ள சர்வர்கள் கூடுதல் தரவுப் போக்குவரத்தைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே இணைப்புப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட சர்வர்கள் சீராக இயங்குவதாக மைக்ரோசாப்ட் பின்னர் தெரிவித்தது.

தரவுப் போக்குவரத்தை மாற்று வழிகள் மூலம் திருப்பிவிடுவதாகவும், மீதமுள்ள பாதிக்கப்பட்ட சர்வர்களை மீண்டும் ஆன்லைனுக்கு கொண்டுவரப் பணியாற்றி வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த இடையூறு, மைக்ரோசாப்ட்டின் உள்கட்டமைப்பை சார்ந்திருந்த மூன்றாம் தரப்பு சேவைகளையும் பாதித்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அஸூர் கிளவுட் தளத்தில் ஏற்பட்ட இடையூறு குறித்து அறிவித்த சில வாரங்களுக்குப் பிறகு இந்தச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது.

X