

எதிர்காலத்தில் சேவைகள் முடக்கத்தை எதிர்கொள்ள மைக்ரோசாப்ட் கோட் ரெட் திட்டத்தை அறிவித்துள்ளது.
நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 24 மணி நேரம் மைக்ரோசாப்ட் சேவைகள் தொழில்நுட்ப கோளாறால் முடங்கின.
எக்ஸ்சேஞ்ச், அவுட்லுக், டீம்ஸ் மற்றும் கோபைலட் போன்ற சேவை முடக்கம் உலகம் முழுவதும் பல்வேறு செயல்பாடுகளை முடக்கியது.
குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அரசாங்க சேவைகள், விமான நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளை கடுமையாகப் பாதித்தது.
இது சைபர் தாக்குதலால் நிகழவில்லை என்றும் Bug காரணமாகவே இது நடந்ததாக மைக்ரோசாப்ட் நம்புகிறது.
அதன் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா இந்தச் சம்பவத்திற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.
குறைபாடு சரியசெயப்பட்டு மீண்டும் சேவைகள் தொடங்கியபோதும் இந்த கோளாறு பொறியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.
மைக்ரோசாப்ட்M365 Core & Work IQ பிரிவின் துணைத் தலைவர் அமண்டா சில்வர் ஒரு குறிப்பில், இந்தச் செயலிழப்பின் போது பொறியாளர்கள் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கோளாறு ஏற்பட்ட சமயத்தில் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளிலிருந்து தரவுகள் சிதறிக் கிடந்ததால், முன்னணிப் பொறியாளர்கள் 11 டீம்ஸ் உரையாடல்களில் 11,000க்கும் மேற்பட்ட செய்திகளை பரிமாறிக்கொண்டபோதிலும் என்ன பிரச்சனை என்பதை கண்டறிய தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையைத் தடுப்பதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 'கோட் ரெட்' எனப்படும் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதுபோன்ற நெருக்கடிகளை சமாளிக்க அந்நிறுவனம் தனது பாதுகாப்பு அமைப்புகளை மாற்றப் போகிறது என்பது இதன் அர்த்தம்.
இதில் மின் சுமை குறைப்பு, புவியியல் பகுதி வாரியாக இணையப் போக்குவரத்தைப் பிரித்தல் மற்றும் ஒரு விரைவான மீட்பு அமைப்பை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஒரு மணி நேரத்திற்குள் தீர்ப்பதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதைச் செய்வதற்காக, பொறியாளர்களுக்கு உதவுவதற்கும் விரைவான கணினி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் ஏஐ ஏஜென்ட்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.