2023 ரீவைண்ட்- சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு.. தொடரும் பிரச்சனை

ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள்.
2023 ரீவைண்ட்- சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு.. தொடரும் பிரச்சனை
Published on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் விஜய். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் அவரை "சூப்பர் ஸ்டார்" என்றும் விஜய் ரசிகர்கள் அவரை "தளபதி" என்று அடைமொழி வைத்து அழைத்து வருகின்றனர்.

இவர்களின் படங்கள் திரையரங்குகளில் வந்தாலே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் திளைப்பார்கள். அதிலும் நடிகர் ரஜினியின் படங்கள் அசால்ட்டாக ரூ.100 கோடி வசூலை குவித்து ஹிட் அடிக்கும். இதன் மூலம் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ரஜினி தக்க வைத்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், ரஜினி நடித்த தர்பார் , அண்ணாத்த போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இந்த நேரத்தில் விஜய் நடித்த படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், படத்தின் பிரீ பிசினஸுக்கும் வழியை அமைத்தது. இந்த நேரத்தில் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன.

இதைத்தொடர்ந்து திரை ஆர்வலர்கள் பலர் அடுத்த "சூப்பர் ஸ்டார்" விஜய் தான் என்று கூறத் தொடங்கினர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. மேலும், இந்த சர்ச்சை விவாதமாக மாற அந்த விவாதத்தை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் விதமாக இருவரின் படங்களிலும் இடம்பெற்றிருந்த பாடல்கள் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.

இந்த சர்ச்சையானது இதோடு முடியாமல் பிரபலங்கள், தலைவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கும் வகையில் பேசப்பட்டது. இவ்வாறு பல சர்ச்சைகளை உள்ளடக்கிய "சூப்பர் ஸ்டார்" பட்டம் யாருக்கு என்பது ஒரு முடிவில்லா பிரச்சனையாக தொடர்கிறது...

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com