என் மலர்

    நீங்கள் தேடியது "#அன்புமணி ராமதாஸ்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கென்று கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி அரசை செயல்படுத்த வைக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. இந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 55 ஆண்டு காலம் திராவிட ஆட்சி நடந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாளை பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

    அதில் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்குரிய செயல் திட்டமும் வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்கிறேன் என்று அறிவிப்பு வரவேண்டும். போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நானும் நம்புகிறேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 15 மாதம் ஆகியும் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. காவிரி ஆற்றில் கடந்த 28 நாட்களாக 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கர்நாடக மாநிலம் நமது தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். ஆனால் 28 நாட்களில் 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    இதை தடுக்க காவிரியில் குறைந்தது 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேர்த்து வைக்க முடியும். இந்தியாவில் இலவசம் வேண்டுமா வேண்டாமா என்ற சர்ச்சை உள்ளது. இது குறித்து பா.ம.க. அந்நிலைப்பாடு தேவையான இலவசம் வேண்டும் என்பதே ஆகும். தேவையான இலவசம் என்றால் கல்வி, சுகாதாரம், வேளாண் இடுப்பொருள் சம்பந்தமான இலவசங்கள் வேண்டும். வாக்குக்கான இலவசம் வேண்டாம்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அழுத்தம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு இது தொடர்பான அரசாணை வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு அப்படியே இருந்து விட்டது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பவானி ஜமுக்காளம் உலகப் புகழ்பெற்றது. நூல் விலை உயர்வு காரணமாக 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துவிட்டனர்.

    தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. நூலுக்கு போடப்பட்டுள்ளது. அதை விற்கவும் ஜி.எஸ்.டி. தனியாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போதை பழக்கம் கூடி வருகிறது. பள்ளி கல்லூரி அருகே சர்வ சாதாரணமாக கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதை போலீஸ் நினைத்தால் அடியோடு தடுத்து விடலாம். தற்போது கஞ்சாவை விற்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

    மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கென்று கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி அரசை செயல்படுத்த வைக்கிறோம். ஆக்கபூர்வமான அரசியலை நடத்தி வருகிறோம். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று 16 ஆண்டுகளாக பா.ம.க. கூறிவந்தது. அதை ஏற்று அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற முறை ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கல்விக் கொள்கை உள்ளது. நீட் நுழைவு தேர்வால் அதிக தற்கொலைகள் நடக்கிறது. இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். தங்களது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பா.ம.க. 2.0 என்ற செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். அதற்கான வெற்றி வியூகத்தை 2024-ல் நாங்கள் அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
    • அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை.

    பவானி:

    பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் பா.ம.க. தலைவராக பொறுப்பேற்று கொண்ட பிறகு அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) வருகிறார். தொடர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

    இதைதொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் பவானி வி.என்.சி. கார்னர் தேர்வீதி பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு சிற்ப்புறை ஆற்றுகிறார்.

    மேலும் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக இன்று மாலை அன்புமணி ராமதாசுக்கு மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் லட்சுமி நகர் பைபாஸ் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து பேசுகிறார்.

    அங்கு இருந்து பவானி செல்லும் அவருக்கு கூடுதுறை பாலம் அருகே வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் பவானியில் நடக்கும் பொது க்கூட்டத்தில் பேசுகிறார்.

    இதை தொடர்ந்து இன்று இரவு ஈரோடு வில்லசம்பட்டியில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலை ஈரோட்டில் இருந்து நசியனூர், காஞ்சிகோவில், கவுந்தப்பாடி, கோபி செட்டிபாளையம் பகுதிகளுக்கு அவர் சென்று பா.ம.க. கொடி ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.

    தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அங்கு இருந்து செல்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்.
    • செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் நேற்று நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் நிறைவு விழா மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டுகள் தோன்றிய வரலாறு, தமிழர்களின் வலிமை ஆகியவை தத்ரூபமாக சித்தரித்துக் காட்டப்பட்டன. ஒட்டுமொத்த உலகமும் இதை பார்த்து அறிந்தது.

    சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்கவிழாவும், மாமல்லபுரத்தில் நடந்த போட்டிகளும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டும் வகையில் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. இவற்றைக் கண்டு தமிழன் என்ற முறையில் நான் பெருமையும், பெருமிதமும் அடைகிறேன்.

    செஸ் ஒலிம்பியாட்டையும், அதன் தொடக்க, நிறைவு விழாக்களையும் மிகச்சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்ய நாதன் மற்றும் அதிகாரிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோருக்கும், விழாக்களை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா மற்றும் நிகல் சரின், அர்ஜுன், மகளிர் அணியில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது.
    • மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய விடுதலை நாளான ஆகஸ்ட் 15-ந்தேதி கிராம சபைக் கூட்டங்களை நடத்தும்படி தமிழ்நாடு அரசு ஆணையிட்டிருக்கிறது. மக்களாட்சியின் ஆணிவேர் கிராமசபைகள் தான். மக்களின் விருப்பங்களை ஆட்சியாளர்களுக்கு அழுத்தமாக தெரிவிப்பதற்கான கருவியும் இது தான்.

    தமிழ்நாட்டை இன்று பீடித்துள்ள இரு பெருங்கேடுகள் ஆன்லைன் சூதாட்டமும், மதுக்கடைகளும் தான். ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மது அரக்கன் ஆண்டுக்கு இரு லட்சம் உயிர்களை பலி கொள்கிறான்.

    இரு சமூகக்கேடுகளையும் ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓங்கி ஒலித்தாலும், அவற்றின் தீமைகளை ஆட்சியாளர்களே ஒப்பு கொண்டாலும் கூட, ஆன்லைன் சூதாட்டத்தையும், மதுவையும் தடை செய்வது தொடுவானத்தைப் போல நீண்டு கொண்டே தான் செல்கிறது.

    மக்களின் உணர்வுகளை அரசிடம் உரக்க சொல்லும் வகையில் வரும் 15-ந் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் ஆன்லைன் சூதாட்டத் தடை, மது விலக்கை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக கிராம சபைக் கூட்டங்களில் பா.ம.க.வினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகளில் முதன்முறையாக ஜிக் பணியாளர்கள் எனப்படும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த வரையறை சேர்க்கப்பட்டிருக்கிறது.
    • இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம் மற்றும் மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க 2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வகை செய்கின்றன.

    சென்னை:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். அவர் கூறும்போது, "செயலிகளின் அடிப்படையில் பணியாற்றும் கால் டாக்சி ஓட்டுனர், உணவு வினியோக ஊழியர்களின் நலன்கள், உரிமைகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்ய ஏதேனும் கொள்கைத் திட்டத்தை அரசு வைத்திருக்கிறதா?" என்றார்.

    அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை மந்திரி ராமேஸ்வர் தெலி கூறியதாவது:-

    "2020-ஆம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகளில் முதன்முறையாக ஜிக் பணியாளர்கள் எனப்படும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த வரையறை சேர்க்கப்பட்டிருக்கிறது. பணியின் போது உயிரிழப்பு, ஊனம் ஏற்படுதல் ஆகியவற்றுக்கு இழப்பீடு, விபத்துக் காப்பீடு, மருத்துவம் மற்றும் மகப்பேறு பயன்கள், முதுமைக்கால பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பொருத்தமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வகுக்க 2020-ம் ஆண்டின் சமூகப் பாதுகாப்பு விதிகள் வகை செய்கின்றன.

    இதற்காக சமூகப் பாதுகாப்பு நிதியம் ஒன்றை ஏற்படுத்தவும் இந்த விதிகள் வகை செய்கின்றன. இத்தகைய தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்கள், அவற்றின் ஆண்டு வருமானத்தில் 1 முதல் 2 சதவீத தொகையை, அது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் 5 சதவீதத்துக்கு மிகாத அளவில், சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பங்களிக்க வேண்டும்.

    தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும், அவர்களை பற்றிய தகவல் தொகுப்பை உருவாக்கவும் இணையதளம் ஒன்றும் 26.8.2021 அன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
    • மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் மல்யுத்த ஆட்டத்தில் பஜ்ரங் புனியா, தீபக் புனியா, சாக்‌ஷி மாலிக் ஆகிய மூவரும் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஒரே நாளில், ஒரே ஆட்டத்தில் மூன்று தங்கப் பதக்கங்களை இந்தியாவுக்கு வென்று கொடுத்த மூவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

    மல்யுத்தப் போட்டிகளில் அன்ஷு மாலிக் வெள்ளி, திவ்யா காக்ரன், மோகித் கிரேவால் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றியுள்ளனர். மல்யுத்தத்தில் மட்டும் ஒரே நாளில் இந்தியர்கள் 6 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கும் பாராட்டுகள்.

    ஒரே நாளில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தடகளம், ஆக்கி, பாட்மிண்டன் போட்டிகளிலும் இந்தியா வெற்றிகளைக் குவித்து பதக்கப்பட்டியலில் மேலும் முன்னேற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் உயர் கல்வித் துறைக்கு இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும் அது ஏற்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிர்வாகக் காரணம் என்று கூறி பணியிட மாற்றங்கள் வழங்கப்படுகின்றன. அதனால் தகுதியானவர்களுக்கு இட மாறுதல் கிடைப்பதில்லை.

    தகுதியானவர்களுக்கு, நியாயமான, சட்டப்பூர்வ வழியில் இடமாறுதல் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆகும். இதில் எந்த முறைகேடுகளும் நடப்பதில்லை. பள்ளிக்கல்வித் துறையில் இந்த முறையில் முறையாக இடமாறுதல் வழங்கப்படுகிறது.

    அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தகுதியும், தேவையும் உள்ள கல்லூரி பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது.
    • ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி, தமிழ்நாட்டின் காவிரி டெல்டாவில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட எந்த திட்டமும் கைவிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

    தமிழ்நாட்டிற்கு அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களின் பட்டியலையும் பெட்ரோலிய அமைச்சர் வெளியிட்டார்.

    மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள விவரங்களின்படி தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தம் 31 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

    இந்தத் திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பாலைவனமாக மாறிவிடும். இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்காது; மாறாக பாதுகாக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் மண்டலமாகவே இருக்கும்.

    புவி வெப்பமயமாதல் காரணமாக உலகமே பேரழிவை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது. அதைத் தவிர்க்க படிம எரி பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எழுந்துள்ளது. இத்தகைய தருணத்தில் காவிரி படுகையை அழித்து விட்டு, ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு துடிப்பது நியாயமல்ல. இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் 31 திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் ஒன்று கூட இன்று வரை தொடங்கப்படவில்லை. அதனால், அவை அனைத்தும் புதிய திட்டங்களாகவே கருதப்பட வேண்டும். காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்தின்படி புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால் அவை அனைத்தையும் கைவிடும்படி மத்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் அந்தத் திட்டங்களை செயல்படுத்த முடியாது என்பதால், அவற்றுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது.
    • ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

    கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றம் அளிக்கிறது.

    ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது என்பதை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்?

    ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் கடந்த ஓராண்டில் மட்டும் 27 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஈடு செய்ய முடியாத விலை ஆகும்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு இனி ஒருவர் கூட உயிரிழக்கக் கூடாது. ஒரு குடும்பம் கூட நடுத்தெருவுக்கு வரக்கூடாது. அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் பெற்று ஆளுனர் மூலமாக பிறப்பிக்க வேண்டும்.

    இதில் தாமதம் செய்யப்பட்டால், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் நடத்தப்பட்டது போன்ற மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    • போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் தலைமை தாங்கினார். ஏ.கே.மூர்த்தி, கே.என்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் டாக்டர் அன்புமணிராமதாஸ் பேசியதாவது:-

    போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. போதைப் பொருள்களின் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

    எதிர்காலத் தமிழகத்தின் தூண்களான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறார்கள். பள்ளிக் கூட வாசல்களில், போதைப் பொருள்கள் கிடைக்கிறது. கைக்கு எட்டிய போதைப் பொருளால், மாணவச் சமூகம் அழிகிறது. போதைப் பழக்கக் கேட்டில் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுகிறது. 50 லட்சம் பேர் தமிழ் நாட்டில் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள். போதை வணிகத்தைத் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை காலை போராட்டம் நடத்தப்படுகிறது.
    • சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை காலை நடைபெற உள்ள போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க. சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை போராட்டம் நடத்தப்படுகிறது.

    சென்னையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்திற்கு பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.