

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் நான்காவது சுற்று போட்டியில், வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ், 34-வது நகர்த்தலில் டிரா செய்தார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ் ஆகியோர் மோதுகின்றனர். 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் 3 சுற்று ஆட்டங்கள் டிராவில் முடிந்திருந்தது.
இந்நிலையில் நான்காவது சுற்று போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ், 34-வது நகர்த்தலில் டிரா செய்தார்.
ஒரே மாதிரியான நகர்வுகளை 3 முறை திரும்ப திரும்ப செய்ததன் அடிப்படையில் இந்த ஆட்டம் டிரா ஆனது.
இன்று இரவு நடக்கும் ஐந்தாவது சுற்றில் தமிழக கிராண்ட்மாஸ்டர் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடுவார்.