மகளிர் ப்ரீமியர் லீக் 2027: போட்டி தேதி, ஏலம் அறிவிப்பு!

இரண்டுமுறை கோப்பை வென்ற அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளது.
Women's Premier League 2027: Tournament dates and auction announcement!
Published on

மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் ஐந்தாவது சீசன், அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்டோபர் 28ம் தேதி கொச்சியில் நடைபெறும் என்றும், வீராங்கனைகளை தக்கவைத்து கொள்வதற்கான இறுதிநாள் செப்.28 என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடப்பாண்டு சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது. டெல்லியும், பெங்களூரு அணியும் இறுதிப்போட்டியில் மோதிய நிலையில், ஆர்சிபி த்ரில் வெற்றிப் பெற்றது.

ஐந்தாவது சீசனிலும் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகளும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இத்தொடர் நடத்தப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com