SENA நாடுகளுக்கு எதிராக 50 ரன் சராசரி: புதிய வரலாறு படைத்த விராட் கோலி

இங்கிலாந்துக்கு எதிராக 36 இன்னிங்சில் 1493 ரன் எடுத்துள்ளார்.
Virat kohli
Published on: 

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான வீராட் கோலி 37 வயதிலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு அவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் 51 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் 74 ரன் எடுத்தார். இதன்மூலம் வீராட் கோலி பல சாதனைகளை படைத்தார்.

அவர் வெளிநாடுகளில் 50 மற்றும் அதற்கு மேல் 50-வது முறையாக (29 அரை சதம்+ 21 சதம்) ரன் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 122 ஆட்டத்தில் இதை சாதித்தார். இலங்கையை சேர்ந்த சங்ககரா 45 தடவை வெளிநாட்டு மைதானங்களில் 50 மற்றும் அதற்கு மேல் (35 அரை சதம் +10 சதம்) ரன் எடுத்து இருந்தார்.

50 ரன்னுக்கு மேல் சராசரி

சேனா நாடுகளுக்கு (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) எதிராக 50 மற்றும் அதற்கு மேற்பட்ட பேட்டிங்கில் சராசரி வைத்துள்ள முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை வீராட் கோலி படைத்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஒருநாள் போட்டியில் ஆடி 18 இன்னிங்சில் 993 ரன் எடுத்துள்ளார். அவர் சராசரி 78.38 ஆகும். அதில் 3 சதமும், 6 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 160 ரன் குவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 36 இன்னிங்சில் 1493 ரன் எடுத்துள்ளார். சராசரி 5148 ஆகும். அதிகபட்சமாக 107 ரன் குவித்துள்ளார். ஒரு சதமும், 14 அரை சதமும் பதிவு செய்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிராக

நியூசிலாந்துக்கு எதிராக 14 ஆட்டத்தில் ஒரு சதம், 14 அரை சதத்துடன் 670 ரன் எடுத்துள்ளார். சராசரி 51.43 ஆகும். நேற்றைய ஆட்டத்தில் எடுத்த ரன் மூலம் நியூசிலாந்துக்கு எதிராகவும் 50 ரன் சராசரியை கோலி பெற்றார். அந்நாட்டுக்கு எதிராக 1 சதமும், 5 அரை சதமும், அடித்துள்ளார். அதிகபட்சமாக 123 ரன் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 32 இன்னிங்சில் 1,401 ரன் எடுத்துள்ளார். சராசரி 50.03 ஆகும். அதிகபட்சமாக 133 ரன் குவித்துள்ளார். 5 சதம், 7 அரை சதம் பதிவு செய்துள்ளார்.

இதேபோல ரன் சேசிங்கில் தெண்டுல்கரின் சாதனை யையும் முறியடித்தார். 3-வது வரிசையில் களம் இறங்கி 13 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு

20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 12-ந் தேதி அவர் டெஸ்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிட்னியில் விளையாடியது அவரது கடைசி டெஸ்டாகும்.

ஒருநாள் போட்டியில் மட்டுமே வீராட்கோலி தற்போது ஆடி வருகிறார். 2027-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை ஆடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வீராட் கோலி 16 ஒருநாள் போட்டியில் விளையாடி 1,002 ரன் எடுத்துள்ளார். சராசரி 77.07 ஆகும் 4 சதமும், 6 அரை சதமும் அடித்துள்ளார்.

15,183 ரன்

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக வீராட் கோலி 2-வது இடத்தில் உள்ளார். அவர் 318 இன்னிங்சில் 15,183 ரன் எடுத்துள்ளார். சராசரி 58.84 ஆகும். 55 சதமும், 80 அரை சதமும் அடித்துள்ளார். தெண்டுல்கர் 12,426 ரன் (452 இன்னிங்ஸ்) எடுத்துள்ளார்.

X