6-வது திருமண நாள்: நண்பர்களுடன் கொண்டாடிய விராட் - அனுஷ்கா.. வைரலாகும் புகைப்படங்கள்..

இந்திய கிரிக்கெட்டில் முன்னணி வீரராக விராட் கோலி உள்ளார். விராட் - அனுஷ்கா ஜோடி திருமண நாளை கொண்டாடினர்.
6-வது திருமண நாள்: நண்பர்களுடன் கொண்டாடிய விராட் - அனுஷ்கா.. வைரலாகும் புகைப்படங்கள்..
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நேற்று தங்களின் ஆறாவது திருமண நாளை கொண்டாடினர். இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன.

உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நடைபெற்ற திருமண நாள் கொண்டாட்டத்தில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். இது தொடர்பான பதிவில், " இன்றைய தினம் காதலன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் முழுமையாக கழிந்ததால், கிராமில் பதிவிட அதிக தாமதம் ஆகி விட்டது. 6+ இன்ஃபினிட்டி எமோஜி, காதல் சின்னம் எமோஜி, எனது நியுமெரோ யூனோவுடன்" என குறிப்பிட்டு கோலியுடன் கட்டியணைத்து நிற்கும் புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா பகிர்ந்துள்ளார்.

அனுஷ்கா ஷர்மா மட்டுமின்றி விராட் கோலியும் தனது இன்ஸ்டாகிராமில் அனுஷ்கா ஷர்மாவுடன் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com