வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.
வினோத் காம்ப்ளி மருத்துவமனையில் அனுமதி
Published on: 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல்நலக்குறைவால் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது ரசிகர்களில் ஒருவரால் வினோத் காம்ப்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சரியான காரணங்களைக் கண்டறிய முடியவில்லை என்றாலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

1993-2000 க்கு இடையில் இந்தியாவுக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் வினோத் காம்ப்ளி விளையாடி உள்ளார்.

உடல் நலம் பதிக்கப்பட்டுள்ள உள்ள வினோத் காம்ப்ளி சமீபத்தில் அங்குள்ள சிவாஜி பூங்காவில் புகழ்பெற்ற பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

சில காலமாக உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளுடன் வினோத் காம்ப்ளி போராடி வருகிறார்.

X