ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் செர்பியா வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச், அல்காரஸ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

பீஜிங்:

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் செர்பியா வீரர் ஜோகோவிச், அமெரிக்க வீரர் அலெக்சன் மைக்கேல்சன் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-3) , 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ், சீன வீரர் ஷாங் ஜங்செங் உடன் மோதினார். இதில் அல்காரஸ் 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com