சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப், முச்சோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நம்பர் 4 வீராங்கனையான கோகோ காப் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
சீனா ஓபன் டென்னிஸ்: கோகோ காப், முச்சோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

பீஜிங்:

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, சீன வீராங்கனை குயின்வென் ஷெங் உடன் மோதினார்.

இதில் முச்சோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி போட்டியில் நம்பர் 4 வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 4-6 என இழந்த கோகோ காப், அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என கைப்பற்றி இறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் முச்சோவா, கோகோ காப் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com