காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும்.
காமன்வெல்த் போட்டி: விளையாட்டு வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
Published on

சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பர்மிங்காம் காமன் வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்கக்காரனாகி விட்ட சரத் கமல், சத்தியன் ஞானசேகரன், தீபிகா பல்லிகல், இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து, ஆற்றல்மிகு லக்‌ஷயா சென், ஆதிக்கமிகு நிக்கத் சரீன், இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர், மகளிர் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட, நாட்டுக்காகத் தங்களது முழு உழைப்பையும் அளித்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது பாராட்டுகள்.

இனி வருபவையாவும் இதைவிடச் சிறப்பானவையாக மட்டுமே இருக்கும். தங்களது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com