சதம் அடித்ததால் கனவு நனவானது- ஸ்ரேயாஸ் அய்யர் மகிழ்ச்சி

நமன் தீர் முக்கியமான தருணங்களில் பந்துவீச விரும்பினார்.
Shreyas Iyer
Published on: 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. 172 ரன் இலக்கு லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் 171 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 172 ரன் இலக்காக இருந்தது.

ரூதர்போர்ட் 34 பந்தில் 56 ரன்னும் (6 பவுண்டரி 3 சிக்சர்), கேப்டன் ஷாய் ஹோப் 37 பந்தில் 52 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். நமன் தீர் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் தலா 2 விக்கெட் டும், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஸ்ரேயாஸ் அய்யர் சதம்

பின்னர் ஆடிய இந்தியா 172 ரன் இலக்கை 32 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் எளிதில் எடுத்தது. 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 43 பந்தில் 102 ரன்னும் (10 பவுண்டரி, 6 சிக்சர்), இஷான் கிஷன் 27 பந்தில் 37 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.

உடல் சோர்வு

வெற்றி குறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆடி முடிந்த உடனேயே இங்கு வந்து உள்ளோம். மிகுந்த சோர்வை ஏற்படுத்திய பயணத்திற்கு பிறகு நான் எங்கே இருக்கிறேன் என்றே தெரியாத நிலையில் இருந்தேன். நீண்ட விமான பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வை நாங்கள் ஒரு சாக்காக கருதவில்லை.

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒரு நாள் தொடர் உற்சாகத்தையும், அது எவ்வளவு சிறப்பாக அமைந்தது என்பதையும் நாங்கள் பார்த்தோம். சரியான செயல்முறையை கடைப்பிடிப்பது முக்கியமாக இருந்தது.

முதலில் பந்துவீசியது பெரிதும் உதவியது. நமன் தீர் முக்கியமான தருணங்களில் பந்துவீச விரும்பினார். அவர் பந்து திரும்பும் தன்மையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அவரது மனப்பான்மை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

கனவு நனவானது

முதல் சதத்தை பற்றி நினைத்து கொண்டு இருந்தேன். அந்த கனவு நனவானது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியின் சுவையே தனித்துவமானது. அணிக்காக போட்டியை வென்று கொடுத்து உங்கள் நாளாக அமைந்தால் அது சிறப்பானதே.

ஒட்டுமொத்தமாக இந்த போட்டி எங்களுக்கு அபாரமாக அமைந்தது. இதே மனநிலையுடன் தொடர்ந்து செயல்பட்டால் 20 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் அபாயகரமான அணிகளில் ஒன்றாக நாம் திகழூவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2-வது போட்டி

இந்த வெற்றி மூலம் 5 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது போட்டி வருகிற 9-ந்தேதி ராஞ்சியில் நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com