

நியூசிலாதிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முக்கியமான ரன் அவுட்டை தவறவிட்ட ஆகாஸ் தீப்பை பார்த்து கேப்டன் சுப்மன் கில் ஆக்ரோஷமாக கத்திய நிலையில், நீங்கள் வந்து பந்து வீசுங்கள் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே விமர்சனம் செய்துள்ளார்.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒடிஐ வெற்றியை தொடர்ந்து, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் வெலிங்டனில் நேற்று நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் சமனில் முடிந்தது.
இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் 71 வது ஓவர் வீசப்பட்டு கொண்டிருந்த போது, வாசிங்டன் வீசிய பந்தை நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சல் மிட்-ஆன் நோக்கி அடித்தார்.
அப்போது ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஆகாஸ் தீப், பந்தை எடுக்க தவறியதை தொடர்ந்து, முக்கியமான ரன் அவுட் வாய்ப்பு பறிபோனது. மேலும் இந்த தருணம் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய மிட்சல் சுமார் 186 பந்துகள் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, போட்டியை டிராவை நோக்கி அழைத்து சென்றார்.
இதற்கிடையில் ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மிட்சல் விக்கெட்டை தவறவிட்ட ஆகாஸ் தீப்பை பார்த்து, கேப்டன் சுப்மன் கில் ஆக்ரோஷமாக கத்தினார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ரஹானே வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி நேர்காணலுக்கு ரஹானே அளித்த பேட்டியில், ”இதுபோன்ற சம்பவங்கள் ஆட்டத்தில் நடப்பது சகஜம் தான், ஆனால் அந்த ஃபீல்டருக்கு சக வீரர்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஆகாஸ் தீப்பிற்கு அந்த தருணத்தில் அந்த ஆதரவு தேவைப்பட்டது.
வேகப்பந்து வீச்சாளர்கள் தான் உங்களுக்கு விக்கெட்டை பெற்று தருவார்கள். அவர்கள் ஆட்டத்தில் முக்கியமான நல்ல பந்துகளை வீசி,ஒரு விக்கெட்டை எடுக்கலாம்;
அல்லது அவர்கள் ஒரு அற்புதமான கேட்சை பிடிக்கலாம். நீங்கள் வந்து முதலில் பந்து வீசுங்கள்” என ரஹானே கூறினார்.