புரோ கபடி லீக்- ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் அணி

தெலுங்கு டைட்டன்ஸ் அணியையும் 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியையும் வீழ்த்தியது.பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
புரோ கபடி லீக்- ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் தமிழ் தலைவாஸ் அணி
Published on

ஐதராபாத்:

16-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் 15-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ் தலைவாஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியையும் 2-வது ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியையும் வீழ்த்தியது.

அந்த அணி 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் நரேந்தர், சச்சின் தன்வார், சாஹில் குலியா, நிதிஷ்குமார், அபிஷேக், மனோகரன் ஹொசைன் பஸ்தாமி, சாகர் ராரே மாசானமுத்து ஆகிய வீரர்கள் உள்ளனர்.

தமிழ் தலைவாஸ் தனது 2 போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பாட்னா பைரட்ஸ் அணி ஒரு ஆட்டத்தில் விளையாடி அதில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி முதல் வெற்றியை எதிர் நோக்கி இருக்கிறது.

இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.

புனேரி பால்டன் 3 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று உள்ளது. பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் விளையாடி அனைத்திலும் தோற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com