புரோ ஹாக்கி லீக் : புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்திய ஹாக்கி அணி வீரர்கள்
இந்திய ஹாக்கி அணி வீரர்கள்
Published on

புவனேஸ்வர்:


9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

இந்நிலையில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் நடைபெற்றது.  இதில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.  

இதன் மூலம் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடம் பிடித்தது.  2வது இடத்தில் ஜெர்மனியும், 3வதுஇடத்தில் நெதர்லாந்தும் உள்ளன.  இன்று நடைபெறும் லீக் போட்டியில் இந்தியா மீண்டும் ஜெர்மனியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com