காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகள் பங்கேற்கின்றன.
pm modi
Published on

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. ஆகஸ்ட் 2-ம் தேதி வரை 11 நாட்கள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இதில் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்பட 74 நாடுகளில் இருந்து 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர் .

தடகளம், பளு தூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக் (ஆர்ஸ்டிக்), சைக்கிளிங், ஜூடோ, நெட் பால், பவுல்ஸ் வலு தூக்குதல் (பாரா பிரிவினருக்கு மட்டும்) ஆகிய 11 விளையாட்டுகள் 215 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 6 விளையாட்டுகள் பாரா பிரிவினருக்கு நடத்தப்படுகிறது.

தேசிய கொடி

இதில் இந்தியா சார்பில் 126 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இதில் 78 பேர் வீரர்கள், 48 வீராங்கனைகள் கலந்துகொள்கிறார்கள். 8 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். 5 பாரா விளையாட்டுகளில் கலந்துகொள்கிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் தேசிய கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ஆகியோர் ஏந்திச்சென்றனர். இன்று முதல் போட்டிகள் ஆரம்பமாகிறது.

இந்தியா இன்று ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் மற்றும் பாரா நீச்சல், பாரா வலு தூக்குதல், லான் பவுல்ஸ், குத்துச்சண்டை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறது.

பிரதமர் மோடி வாழ்த்து

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கும் வேளையில், இந்திய அணிக்கு எனது நல்வாழ்த்துக்கள். நமது விளையாட்டு வீரர்கள் இந்தப் போட்டிகளில் பேரார்வம், உறுதி மற்றும் சிறந்து விளங்கும் மனப்பான்மையுடன் பங்கேற்பார்கள் என உறுதியாக நம்புகிறேன். நமது விளையாட்டு வீரர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் எப்போதும் எண்ணற்ற இந்தியர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com