2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை 134 ரன்னுக்கு சுருட்டியது இந்தியா

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, டி20 போட்டியை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.
Gurnoor Brar
Published on: 
Summary

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, டி20 போட்டியை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று வில்லிங்டன்னில் உள்ள ஹென்ரி மைதானத்தில் காலை 7:30 மணிக்கு இரண்டாவது ஒரு நாள் போட்டி தொடங்கியது.

இரண்டாவது ஆட்டத்தின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதால், 50 ஓவர் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சும்பன் கில், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வில் யங், டிம் செஃப்ரட், டாம் லேதம், கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய அளவில் சோபிக்காமல் ஆட்டமிழந்தனர்.

பின்னர் நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் அகுப் நபி, அன்சுல் கம்போஜ் மற்றும் அக்சார் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். வேகப்பந்து பந்துவீச்சாளர் குர்னூர் பிரார் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.

X