ஆசிய பாரா விளையாட்டு: ஹாட்ரிக் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன்

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
thulasimathi
Published on: 

ஆசிய பாரா விளையாட்டில் துளசிமதி முருகேசன் ஹாட்ரிக் பதக்கம் வென்று அசத்தினார்.

ஜப்பானில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் கடந்த 18-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இது 28வது தங்கப் பதக்கம் ஆகும்.

இந்நிலையில், ஆசிய பாரா விளையாட்டில் தமிழக பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன், ராஜஸ்தான் வீராங்கனை மானஷி ஜி ஜோஷி இணைந்து தங்கம் வென்று அசத்தினர்.

மகளிருக்கான இரட்டையர் எஸ் எல்3- எஸ்யு5 பிரிவில் இறுதிப்போட்டியில் இந்தியாவின் துளசிமதி முருகேசன்-மானஷி ஜி ஜோஷி சீனாவின் யங் க்கியூக்ஸிங் - ஸியோ ஜுஜியான் உடன் மோதினர்.

இதில் இந்திய வீராங்கனைகள் 21-16, 21-13 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனைகளை வென்று தங்கம் வென்றனர்.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கு இது இந்த எடிஷனில் மட்டுமே மூன்றாவது பதக்கமாகும்.

ஏற்கனவே இவர் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் வென்றிருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com