ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறினார் லக்சயா சென்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.
lakshya sen
Published on: 
Summary

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லக்சயா சென் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

சமீபத்தில் நடந்த ஹைலோ ஓபன், ஜப்பான் ஓபன் தொடர்களில் லக்சயா சென் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X