கிரிக்கெட் அரைஇறுதி ஆட்டம்: இந்தியா-இலங்கை நாளை மோதல்

இறுதிப் போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் 3-ந் தேதி நடக்கிறது.
IND vs SLK
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டியின் கிரிக்கெட்டில் (20 ஓவர் ) கால்இறுதி ஆட்டங்கள் அனைத்தும் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டன.

இதனால் தர வரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரை இறுதிக்குக்கு தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான், ஆங்காங் , நேபாளம், மலேசியா அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்தியா- இலங்கை

அரை இறுதி போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்திய நேரப்படி நாளை காலை 10.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆசிய கோப்பையில் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் மோதிய 33 ஆட்டங்களில் இந்தியா 21-ல், இலங்கை 9-ல் வெற்றி பெற்றன. 2 போட்டி டை-ல் முடிந்தது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.

பாகிஸ்தான் - வங்காளதேசம்

முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான்- வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.

இறுதிப் போட்டி மற்றும் 3-வது இடத்துக்கான ஆட்டம் 3-ந் தேதி நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com