நாளை கடைசி ஒரு நாள் போட்டி: நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி ?

நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Indian Team
Published on: 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மவுன்ட் மவுங்கானு வில் நாளை (15-ந்தேதி) நடக்கிறது.

பதிலடி கொடுக்குமா?

4 போட்டி முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், வெல்லிங்டனில் நடந்த

2-வது போட்டியில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது .

இந்த 2 ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டு டக்வொர்த் - லீவிஸ் விதிப்படியே முடிவு நிர்ணயிக்கப்பட்டது. ஹேமில்டனில் நடைபெற வேண்டிய 3-வது போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 244 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பதிலடி கொடுத்து இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

வீரர்கள் மாற்றம்

வீரர்களின் மாற்றம் அணிக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், மவுண்ட் மாங்கானுவின் ஆடுகள தன்மையை இந்திய வீரர்கள் சரியாக கணிக்க தவறிவிட்டனர். இதை சரி செய்து நாளை விளையாட வேண்டிய நிலையில் உள்ளனர்.

கடைசி போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும் என்று கருதப்படுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்.

இதனால் அவர் கழற்றி விடப்பட்டு அவரது இடத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ரோகித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கலாம்.

இதே போல் குல்தீப் யாதவ் பந்துவீச்சு எடுபடவில்லை. 8 ஓவரில் 73 ரன்னை விட்டுக் கொடுத்த அவரால் ஒரு விக்கெட்கூட கைப்பற்ற முடியவில்லை.

இதனால் குல்தீப் யாதவுக்கு பதிலாக ஒரு வேகப்பந்து வீரர் தேர்வாகலாம். முகமது சிராஜ்க்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமநிலை

சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த ஆட்டத்திலும் இந்தியாவை வீழ்த்தி தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

ஏற்கனவே 20 ஓவர் தொடரை இழந்ததால் அந்த அணி ஒருநாள் தொடரை சமன் செய்ய கடுமையாக போராடும்.

நேற்றைய போட்டியில் அந்த அணி வீரர்களின் செயல்பாடு மிகவும் அபாரமாக இருந்தது. பேட்டிங், பந்துவீச்சில் அந்த அணி சமநிலையுடன் உள்ளது. வில்யங், டிம் ஷெய்பெர்ட், பின்ஆலன், ஹென்றி, மேத்யூ பிஷர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

காலை 7.30 மணி

இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் 127 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 65-ல், நியூசிலாந்து 53-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டை ஆனது. 8 போட்டி முடிவு இல்லை.

நாளைய போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

X