ஆசிய விளையாட்டு: ஒரே நாளில் 6 தங்கம் - பதக்கப் பட்டியலில் 5வது இடம் பிடித்த இந்தியா

குத்துச்சண்டையில் இந்தியா 3 தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினர்.
boxers
Published on: 
Summary

ஆசிய விளையாட்டில் இந்திய அணி ஒரே நாளில் 6 தங்கம் வென்று அசத்தியது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. நேற்று வரை இந்திய அணி 10 தங்கம், 23 வெள்ளி, 33 வெண்கலம் வென்று மொத்தம் 66 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது.

தங்க வேட்டை

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று 76 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணியினர் குத்துச்சண்டையில் 3 தங்கமும், மல்யுத்தம், வில்வித்தை, பெண்கள் ஹாக்கி என தலா ஒவ்வொரு தங்கமும் பெற்று அசத்தினர்.

வில்வித்தையில் இரண்டு வெள்ளிப் பதக்கமும், டெபக்டக்ரா, படகுப் போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றது.

பதக்கப் பட்டியல்

1. சீனா - 312 பதக்கம் (162 தங்கம்)

2. ஜப்பான் - 237 பதக்கம் (69 தங்கம்)

3. தென் கொரியா - 134 பதக்கம் (33 தங்கம்)

4. உஸ்பெகிஸ்தான் - 63 பதக்கம் (19 தங்கம்)

5. இந்தியா - 76 பதக்கம் (16 தங்கம்)

X

Maalai Malar
www.maalaimalar.com