ஆசிய விளையாட்டு: இன்று ஒரே நாளில் 5 தங்கம் - பதக்கப் பட்டியலில் 4வது இடம்பிடித்தது இந்தியா

கோல்ப் விளையாட்டில் இந்தியாவின் பிரணவி உர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
team india
Published on: 
Summary

ஆசிய விளையாட்டில் இந்திய அணி இன்று ஒரே நாளில் 5 தங்கம் வென்று அசத்தியது. இதன்மூலம் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்து வருகிறது. நேற்று வரை இந்திய அணி 16 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் வென்று மொத்தம் 76 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது.

தங்க வேட்டை

இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 85 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

இந்திய அணியினர் கோல்ப் போட்டியில் ஒரு தங்கம், ஒரு வெள்ளியும் பெற்று அசத்தினர்.

வில்வித்தையில் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு வெண்கலமும், ஆண்கள் கிரிக்கெட்டில் ஒரு தங்கப் பதக்கமும் வென்றனர்.

மல்யுத்தத்தில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கம் வென்றது.

ஆண்கள் ஹாக்கியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.

பதக்கப் பட்டியல் விவரம்:

சீனா - 341 பதக்கம் (169 தங்கம்)

ஜப்பான் - 269 பதக்கம் (83 தங்கம்)

தென் கொரியா - 150 பதக்கம் (39 தங்கம்)

இந்தியா - 85 பதக்கம் (21 தங்கம்)

X

Maalai Malar
www.maalaimalar.com