ஆசிய பாரா விளையாட்டு: பட்டியலில் தொடர்ந்து 4வது இடம்-100 பதக்கங்களை கடந்தது இந்தியா

ஆசிய பாரா விளையாட்டில் பேட்மிண்டனில் துளசிமதி முருகேசன் ஹாட்ரிக் பதக்கம் வென்று அசத்தினார்.
indians
Published on: 
Summary

ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் பதக்க பட்டியலில் இந்தியா 100 பதக்கங்களைக் கடந்து அசத்தி வருகிறது.

ஆசிய பாரா போட்டிகள் ஜப்பானின் அயிச்சி நகோயாவில் நடந்து வருகின்றன. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

நான்காம் நாள் முடிவில் இந்​தி​யா 21 தங்​கம்​, 26 வெள்ளி, 41 வெண்​கலம்​ என மொத்தம் 68 பதக்​கங்​களை வென்​று பட்டியலில் 4-வது இடத்தில் இருந்தது.

இன்றும் 26 பதக்கம்

இந்நிலையில், ஐந்தாம் நாளான இன்றும் இந்தியா பதக்க வேட்டையை அதிகரித்தது. இன்று 9 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று அசத்தியது.

பதக்க பட்டியலில் 4-வது இடம்

இதன்மூலம் ஆசிய பாரா விளையாட்டின் பதக்கப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணி 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

ஆசிய பாரா விளையாட்டில் பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் ஹாட்ரிக் பதக்கம் வென்று அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com