எங்கள் வாழ்வின் ஒளி நீ... விராட் கோலி உருக்கமான பதிவு

விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
எங்கள் வாழ்வின் ஒளி நீ... விராட் கோலி உருக்கமான பதிவு
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அகாய் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தநிலையில் அனுஷ்கா ஷர்மா மே 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். மனைவி அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி விராட் கோலி தனது இன்ஸ்டாவில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில்,

"என் வாழ்க்கையில் உன்னை கண்டறியாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கையையே மொத்தமாக தொலைத்திருப்பேன். எங்கள் வாழ்வின் ஒளி நீ.

நாங்கள் உன்னை மிகவும் நேசிக்கிறோம்!"

என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com