

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை.
இதுதொடர்பாக அணி நிர்வாகம் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
வீரர்கள் தேர்வு தொடர்பாக முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாம் முகமது சிராஜைப் பற்றி மட்டுமே பேசுகிறோம், ஆனால் ஜடேஜாவின் நிலை என்ன? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் அவர் 3-வது இடத்தில் உள்ளார்.
4-வது மற்றும் 5-வது நாட்களில் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சமதளமாக இருக்கும் ஆடுகளங்களிலும் பந்தை நன்றாக சுழற்றவும், பிடிமானம் கொடுக்கவும் கூடியவர் அவர்.
எனவே முகமது சிராஜைப் போலவே ஜடேஜாவுக்கும் இது துரதிர்ஷ்டவசமான ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.