போதையில் கார் ஓட்டிய விவகாரம்: டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்த சிட்னி கோர்ட்

டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக்கொண்டார்.
warner
Published on

மது போதையில் காரை ஓட்டிச் சென்ற விவகாரத்தில் டேவிட் வார்னருக்கு அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை அன்று சிட்னியில் மது குடித்துவிட்டு டேவிட் வார்னர் காரை ஓட்டிச்சென்றார். போக்குவரத்து போலீசார் சோதனையில் வார்னர், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகம் மது அருந்தியது உறுதியானது.

ஒப்புக்கொண்ட வார்னர்

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டேவிட் வார்னர் மது அருந்தியதை ஒப்புக்கொண்டார் என அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார். தனது செயல் முட்டாள்தனமானது. மது அருந்திவிட்டு வாடகை காரில் செல்லாமல் தானே வாகனத்தை ஓட்டிச்சென்றது தவறு எனவும் வார்னர் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆகஸ்ட் 18-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

அபராதம் விதித்த கோர்ட்

இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டேவிட் வார்னருக்கு ரூ.1.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அவரது காரில் பிரீத்லைசர் அல்லது இன்டர் லாக் எனும் கருவியைப் பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

முன்னதாக, டேவிட் வார்னர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கராச்சி கிங்ஸ் அணி கேப்டனாக கடந்த ஏப்ரலில் விளையாடினார். போட்டிகளுக்கான இடைவெளியில் அவர் சிட்னி சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச்சென்றார். சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, வார்னரை வழிமறித்து சோதனை செய்தனர். அவர் அனுமதிக்கப்பட்ட அளவைவிட இரு மடங்கு அதிகமாக மது அருந்தியது தெரியவந்ததால் அவர் கைது செய்யப்பட்டார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com