ரொனால்டோவை 'தல' என கவுரவித்த FIFA- கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்

ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர்.FIFA-ன் சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது.
ரொனால்டோவை 'தல' என கவுரவித்த FIFA- கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்
Published on

விளையாட்டு உலகின் மிகப்பெரிய பெயர்களில் ஒருவரான டோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த டோனியை அவரது ரசிகர்கள் 'தல' என்று அன்பாக அழைத்து வருகின்றனர்.

அதனை தொடர்ந்து டோனியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மீம்கள் மற்றும் வேடிக்கையான வீடியோக்கள் மூலம் thala for a reason என பரப்பப்பட்டது. இப்போது இந்த தல என்ற வார்த்தை கால்பந்து உலகக் கோப்பையிலும் தடம் பதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், டோனியின் புகழ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

உலக புகழ்பெற்ற FIFA-ன் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் thala for a reason என ரொனால்டோ புகைப்படத்தை வைத்து பதிவிட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரொனால்டோ கால்பந்து உலகின் தலைச்சிறந்த ஜாம்பவான்களில் ஒருவர். அவரையும், கிரிக்கெட் ஜாம்பவான் டோனியையும் பெருமை சேர்க்கும் விதமாக ஃபிபா உலகக் கோப்பை 'தல' என்ற இந்த பதிவை வெளியிட்டுள்ளது.

ஃபிபா உலகக் கோப்பை பக்கத்தில் இருந்து பதிவிடப்பட்ட ரொனால்டோவின் கேப்ஷனுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர். மேலும், கமெண்டில் ரொனால்டோவில் ஜெர்சி எண்ணும் 7, டோனியின் ஜெர்சி எண்ணும் 7 எனவே இருவரும் எங்களுக்கு தலதான் என்று பதிவிட்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com