மான்செஸ்டர் வரை பரவிய சூப்பர்ஸ்டார் ஃபீவர் - வைரலாகும் வீடியோ

எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை மான்செஸ்டர் சிட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது.
மான்செஸ்டர் வரை பரவிய சூப்பர்ஸ்டார் ஃபீவர் - வைரலாகும் வீடியோ
Published on

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து கிளப் மான்செஸ்டர் சிட்டி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எர்லிங் ஹாலண்ட் குறித்த வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தது. அந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்தது.

அதில் நடிகர் ரஜினிகாந்தின் 'சூப்பர் ஸ்டார்' டைட்டில் கார்டை வைத்து, தனது அணியின் நட்சத்திர வீரரான ஹாலண்டுக்கு வீடியோ தயார் செய்துள்ளது. ஹாலண்ட் விளையாடி போட்டியின் ஹைலைட்ஸ் வீடியோவை எடிட் செய்து ஜெயிலர் படத்தின், 'Hukum' பாடலை வைத்து ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டிருந்தது. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ரீல் மான்செஸ்டர் சிட்டியின் பரம எதிரியான மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களை ஈர்த்தது. மேலும் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள சர்வதேச வீரருக்கு ரஜினிகாந்த் படத்தில் இடம் பெற்ற பாடல் பயன்படுத்தப் பட்டிருப்பது அவரது ரசிகர்களையும் கால்பந்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com