நியூசிலாந்துடன் முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயம்

நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Newzealand
Published on: 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் ஒருநாள் போட்டி

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அன்சுல் கம் போஜ், அகிப், குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங் ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் குல்தீப் யாதவ் மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த 4 வேகப்பந்து வீரர்களும் 29 போட்டியிலேயே ஆடியவர்கள். அனுபவமில்லாத வீரர்களுடன் களம் இறங்கிய அதே நேரத்தில் அனுபவமிக்க முகமது சிராஜ் ஓரங்கட்டப்பட்டார்.

நியூசிலாந்து திணறல்

வில்யங்கும், டிம் ஷெய்பெர்ட்டும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிவில், இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 186 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்து அணியின் தரப்பில் அதிகபட்சமாக டிம் சீபர்ட் 38, பிளேர் டிக்னர், கிளென் பிலிப்ஸ் 30 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 4, குர்னூர் பிரார் 3, அன்ஷூல் கம்போஜ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

X