

குகேஷ்- சிந்தாரோவ் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தில் இன்று தொடங்குகிறது.
'பிடே' உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந்தேதி வரை நடக்கிறது.
இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவின் குகேசும், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற ஜவோகிர் சிந்தாரோவும் (உஸ் பெகிஸ்தான்) கோதாவில் குதிக்கிறார்கள். இருவருக்கும் தற்போது வயது 20. இரு குறைந்த வயது வீரர்கள் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப்பாக இது பார்க்கப்படுகிறது.
14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் (நீண்ட நேரம் அடிப்படையில்) நடைபெறுகிறது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரை புள்ளியும் வழங்கப்படும்.
யார் முதலில் 7% புள்ளியை எட்டுகிறார்களோ அவர்கள் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள். 14 சுற்று முடிவில் சம நிலை நீடித்தால், டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
ஒவ்வொரு சுற்றுக்கும் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். இது தவிர 41-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் கூடுதலாக 30 வினாடி வழங்கப்படும்.
41-வது நகர்த்தலுக்கு முன்பாக டிராவில் முடிக்க அனுமதிக்கப்படாது. போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.23% கோடியாகும். டைபிரேக்கர் வரை வந்து முடிவு கிடைத் தால் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரருக்கு ரூ.12 கோடியும். 2-வது இடத்தை பிடிக்கும் வீரருக்கு ரூ.11% கோடியும் அளிக்கப்படும்.
சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் குகேஷ். 2024-ம் ஆண்டில் சீனாவின் டிங் லிரெனை சாய்த்து இளம் வயதில் மகுடம் சூடி சரித்திரம் படைத்தார். மீண்டும் பட்டம் வெல்லும் வேட்கையுடன் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தன்னை ஆயத்தப்படுத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் சில கிளாசிக் தொடர்களை புறக்கணித்ததால் தரவரிசையில் 26-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றதில் முக்கிய பங்காற்றினார்.
அதில் தனிப்பட்ட செயல்பாட்டிலும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவார். தொடக்கத்திலேயே ஒரு சில ரவுண்டுகளை வென்று விட்டால் அதன் பிறகு அவரது கை ஒங்கிவிடும் என் பதில் சந்தேகமில்லை.
குகேஷ் கூறுகையில்,"நான் எதையும் தற்காத்துக் கொள்ள இங்கு வரவில்லை. மீண்டும் அனைத்தையும் வெல்லவே வந்துள்ளேன். இது தான் எனது மனநிலை. சிறந்த பார்மில் இருக்கும் சிந்தாரோவ் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவ்வளவு வலிமையான வீரருக்கு எதிராக எனது திற மையை பரிசோதித்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்" என்றார்.
கடந்த ஆண்டு செஸ் உலகக் கோப்பையை தட்டி தூக்கிய சிந்தாரோவ், கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்தார். இதே போல் 46-வது செஸ் ஒலிம்பியாட்டில் உஸ்பெகிஸ்தான் தங்கம் வென்றதிலும் அவரது பங்களிப்பு அளப்பரியது.
எனவே குகேசுக்கு எதிராக அவரே பட்டம் வெல்வார் என்பதே 'நம்பர் ஒன்' வீரர் மாக்னஸ் கார்ல்செனின் (நார்வே) கணிப்பாகும்.
தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் சிந்தாரோவ் கூறுகையில்,"குகேசின் கணக்கீட்டு திறன் நன்றாக உள்ளது. மேலும் கடைசி வரை போராடக்கூடியவர். 2024-ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட்டில் வெய்யிக்கு எதிராக அவர் விளையாடிய விதம் நினைவில் இருக்கிறது.
அது ஒரு விசித்திரமான ஆட்டமாக தோன்றியது. அவருக்கு எதிராக என்னால் முடிந்த வரை சிறந்த முறையில் தயாராகியுள்ளேன். பட்டம் வெல்ல எனக்கே வாய்ப்பு என்ற வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை.
வெற்றி வாய்ப்பு 50:50 என்றே சொல்வேன். ஏனெனில் இது மிகவும் கடினமான போட்டியாக இருக்கப்போகிறது.' என்றார்.
இவ்விரு வீரர்களும் கிளாசிக்கல் வடிவில் 3 முறை நேருக்கு நேர் மோதியிருக்கிறார்கள். இதில் 2-ல் சிந்தாரோவ் வெற்றி கண்டார். மற்றொரு ஆட்டம் டிரா வில் முடிந்தது.
இன்றைய முதல் நாளில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் ஆடுகிறார். செஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.