இந்தியாவுடனான கிரிக்கெட் போட்டி நிறுத்திவைப்பு - இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.627 கோடி நிதி இழப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
England Cricket Board Faces ₹627 Crore Loss
Published on: 
Summary

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு சுமார் ரூபாய் 627 கோடி வரை நிதி இழப்பீட்டை சந்திக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.

அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்று விளையாட உள்ளது.

இதையடுத்து அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரானது, ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இதற்கிடையில் கடந்த 2025 நடைபெற்ற தொடர்களின் மூலமாக சுமார் 158 கோடி ரூபாய் வருவாயை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஈட்டியிருந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கான சர்வதேச ஒளிபரப்பு உரிமையை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் வைத்துள்ளது.

இதன்மூலம் கடந்த ஆறு ஆண்டுகளில் ரூபாய் 2,323 கோடி வருமானத்தை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஈட்டியதாக கூறப்படுகிறது.

சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் 2028 ஆம் ஆண்டுடன் காலாவதியாக உள்ளது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியுடனான எந்தவிதமான போட்டியும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் கையெழுத்தாகாமல் உள்ளது.

இதன் காரணமாக 2027 ஆம் ஆண்டில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சுமார் 627 கோடி ரூபாய் வரை நிதி இழப்புகளை சந்திக்கும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

X