ரிஷப் பண்ட்டுடன் பார்ட்டி செய்த தோனி: 'ஹூக்கா' குடிக்கப் போவதாகப் பேசிய வீடியோ இணையத்தில் வைரல்!

இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது.
Dhoni parties with Rishabh Pant
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி மற்றும் தற்போதைய முன்னணி விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் ஆகியோர் ஒன்றாகப் பங்கேற்ற தனியார் விருந்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

ஹோட்டல் அறை போன்ற சூழலில் நண்பர்களுடன் ரிஷப் பண்ட் சோபாவில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அப்போது அங்கு வரும் எம்.எஸ்.தோனி, மற்றவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட பிறகு, ரிஷப் பண்ட்டிற்கு கை கொடுத்துவிட்டு இந்தி மொழியில் "நான் போய் ஹூக்கா குடித்துவிட்டு வருகிறேன்" என்று சொல்வது போன்ற குரல் கேட்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. தோனி புகையிலை கலந்த 'ஹூக்கா' புகைப்பது குறித்துப் பேசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மை மற்றும் அது எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்திய அணியின் மூத்த வீரரான தோனிக்கும் இளைய வீரரான ரிஷப் பண்ட்டுக்கும் இடையே இருக்கும் நெருங்கிய நட்பு அனைவரும் அறிந்ததே. கிரிக்கெட்டிற்கு வெளியே இருவரும் ஒன்றாக நேரம் செலவிடும் பல வீடியோக்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், தற்போது இந்த புதிய வீடியோ இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com