டெல்லி அணியின் கேப்டன் பதவியில் இருந்து அக்‌ஷர் படேல் விலக முடிவு?

பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
Axar Patel
Published on: 

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக அக்‌ஷர் படேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2 ஐ.பி.எல். போட்டியிலும் டெல்லி அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அக்‌ஷர் படேல் அணிக்கு முக்கியமானவர். அவரை சம்மதிக்க வைக்க முயற்சி நடைபெறுவதாக டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதே நேரத்தில் மினி ஏலம் முடியும் வரை கேப்டனை இறுதி செய்வதை டெல்லி அணி நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X