உங்களின் Comeback-ஐ உலகம் எதிர்நோக்குகிறது- கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த யுவராஜ்

கோலி தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உங்களின் Comeback-ஐ உலகம் எதிர்நோக்குகிறது- கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த யுவராஜ்
Published on

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் தனது 36-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விராட் கோலியின் பிறந்தநாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "சிறப்பான Comeback நம்முடைய Setback-ல் இருந்துதான் வருகிறது. இந்த உலகம் உங்களின் Comeback-ஐ எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கிறது.

கடந்த காலத்தில் அதை நீங்கள் செய்தீர்கள். இப்போது மீண்டும் ஒருமுறை அதை செய்து காண்பிப்பீர்கள் என நான் நம்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி என யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com