உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: விராட் கோலியை முந்திய ஜெய்ஸ்வால்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன் எடுத்து அவுட்டானார்.
jaiswal
Published on: 
Summary

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளினார் ஜெய்ஸ்வால்.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வெல்லிங்டனில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹென்றி நிக்கோல்ஸ் 175 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 118 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து ஆடிய இந்தியா இரண்டாம்நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்துள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன் எடுத்தார். கே.எல். ராகுல் 52 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஜெய்ஸ்வால் 85 ரன் சேர்த்ததன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தினார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விராட் கோலி 79 இன்னிங்சில் 2,617 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஆனால், ஜெய்ஸ்வால் 57 இன்னிங்சில் 2,673 ரன்களைக் குவித்து 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

X