கோலியை இழுத்துப் பிடித்து செல்பி எடுத்த பெண் - வீடியோ வைரல்

நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்தார்மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோலியை இழுத்துப் பிடித்து செல்பி எடுத்த பெண் - வீடியோ வைரல்
Published on

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கோலி ரசிகர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் செல்பி மற்றும் ஆட்டோகிராப்களை கொடுப்பவர். ஆனால் அவரே ரசிகர் ஒருவரின் செயலால் அசௌகர்யமாக உணர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடுத்தர வயது பெண் ஒருவர் விராட் கோலியின் கையைப் பற்றி இழுத்து செல்பிக்கு நிற்கவிக்கிறார். தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற அவசரப்பட்ட விராட் கோலியின் கையைப் பிடித்து எதிர் திசையில் இழுத்து அந்த பெண்மணி செல்பி எடுத்துள்ளார்.

இதனால் அசௌகர்யமாக உணர்ந்தாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் விராட் அந்த பெண்மணியின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த சம்பவமானது சமீபத்தில் மும்பையில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கோலி கலந்துகொண்டபோது நடந்ததாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com