வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
Published on

புதுடெல்லி:

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதனால் இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஜூலை 27, 29, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் (டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளைப்பந்து தொடர்) இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் அவர் ஓய்வு எடுக்க அறிவுத்தப்படலாம் எனவும் தகவல்கல் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com