இவருக்கா சிறந்த பீல்டர் விருது? கோலி- கில் மரண கலாய்: வீடியோ வைரல்

முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலி தட்டிச் சென்றார். 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருது ஷர்துல் தாகூருக்கு வழங்கப்பட்டது.
இவருக்கா சிறந்த பீல்டர் விருது? கோலி- கில் மரண கலாய்: வீடியோ வைரல்
Published on

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 3 போட்டிகளில் விளையாடிய இந்தியா அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஒவ்வொரு போட்டியின் முடிவில் சிறந்த பீல்டருக்கான விருது வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. முதல் போட்டியில் சிறந்த பீல்டர் விருதை விராட் கோலியும் 2-வது போட்டியில் சிறந்த பீல்டர் விருதை ஷர்துல் தாகூரும் தட்டிச் சென்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து அந்த போட்டியில் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்த கேஎல் ராகுலுக்கு சிறந்த பீல்டர் விருது வழங்கப்பட்டது. அவருக்கு விருது வழங்கும் போது அனைத்து வீரர்களும் கலாய்த்தனர். குறிப்பாக விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ரியாக்ஷன் வேர லெவலில் இருந்தது.

கேஎல் ராகுல் பீல்டராக சிறப்பாக செயல்பட்டாலும் கீப்பிங் என்று வரும் போது அவர் சுமாராகவே செயல்படுவார். அதனால் கூட அனைவரும் கலாய்த்திருக்கலாம். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com