பிரேமானந்த் மகாராஜ் ஆசிரமம் செல்ல விராட் கோலி ரூ.5 கோடி பெற்றாரா?

ஆசிரமத்தின் புகழை உயர்த்தவே விராட் கோலிக்கு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
விராட் கோலி
விராட் கோலி
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் உள்ள ஆன்மீக குரு பிரேமானந்த் மகாராஜின் ஆசிரமத்திற்கு வருகை தருவதற்காக 5 கோடி ரூபாய் கட்டணம் பெற்றதாக வெளியான செய்திகளை அவரது அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி சங்கர்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவர் தினேஷ் சர்மா (பலாஹாரி மகாராஜ்) என்பவர், ஆசிரமத்தின் புகழை உயர்த்தவே விராட் கோலிக்கு 5 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார் எனக் குற்றஞ்சாட்டினார்.

விராட் கோலி தரப்பில் மறுப்பு

இக்குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கோலியின் செய்தித் தொடர்பாளர், "இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது மற்றும் உண்மைகளுக்குப் புறம்பானது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜ் மீது கொண்டுள்ள ஆழ்ந்த தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாகவே ஆசிரமத்திற்கு வருகை தருகின்றனர் என்றும், இதில் எவ்வித பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

2023 ஜனவரி மாதம் முதன்முதலாக இங்கு வருகை தந்த கோலி தம்பதியினர், தொடர்ந்து பலமுறை ஆசிரமத்திற்குச் சென்று வந்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்தும் கோலி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற கோலி, முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் குவித்து, சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, அடுத்த வரும் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பை தன்னுடைய கடைசி உலக கோப்பை எனத் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com