ஐயோ அவங்க வேண்டாம், நானே Kit Bag எடுத்துக்குறேன்: விராட் கோலி செயலை புகழ்ந்த மேலாளர்

அருண் ஜெட்லி மைதானத்தில் இளம் வீரர்களுடன் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.ரெயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
ஐயோ அவங்க வேண்டாம், நானே Kit Bag எடுத்துக்குறேன்: விராட் கோலி செயலை புகழ்ந்த மேலாளர்
Published on

புதுடெல்லி:

விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.

இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.

இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி நேற்று ஈடுபட்டார். 36 வயதான அவர் டெல்லி அணி வீரர்களுடன் அருண் ஜெட்லி மைதானத்தில் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.

விராட் கோலி பயிற்சி தொடங்கும் முன்னர் தனது கிட் பையை இழுப்பதைக் கண்ட டெல்லி அணி மேலாளர், அவருக்கு உதவுமாறு சில இளம் வீரர்களிடம் சைகை செய்தார். ஆனால் இந்த வாய்ப்பை கோலி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

கோலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சியாளராக இருந்த பதி, விராட் அவர்கள் உங்களுக்கு உதவட்டும் என கூறியதற்கு, கோலி, என்ன சொல்கிறீர்கள்? இது என்னுடைய கிட், நானே அதை எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com