சேஸிங் கிங்: அதிக ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி

சச்சின் தெண்டுல்கர் சேஸிங்கில் மட்டும் 8720 ரன்கள் அடித்துள்ளார்.
சச்சின் தெண்டுல்கர்- விராட் கோலி
சச்சின் தெண்டுல்கர்- விராட் கோலி
Published on: 

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் 55 சதங்கள் அடித்துள்ளார். சேஸிங்கில் விராட் கோலி அபாரமாக விளையாடக் கூடியவர். இதனால் அவரை சேஸிங் கிங் என்று கூட அழைப்பர்.

சேஸிங்கில் தெண்டுல்கரை முந்திய விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் சேஸிங்கில் 51 பந்தில் 74 ரன்கள் விளாசினார். இவர் 54 ரன்கள் அடித்திருந்தபோது, சேஸிங்கில் அதிக ரன்கள் அடித்த சச்சின் தெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் தெண்டுல்கர் 8720 ரன்கள் எடுத்து இதுவரை, சேஸிங்கில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்து வந்தார். தற்போது விராட் கோலி அதை முறியடித்துள்ளார்.

விராட் கோலி 176 சேஸிங் போட்டியில் 169 இன்னிங்சில் 8720 ரன்களை கடந்துள்ளார். ரோகித் சர்மா 167 போட்டிகளில் 163 இன்னிங்சில் 6801 ரன்கள் எடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.

வெளிநாட்டு மண்ணில் 50 முறை 50+ ரன்கள்

மேலும், இந்தியாவை விட்டு வெளிநாட்டு மண்ணில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இதில் 21 செஞ்சுரி, 29 அரைசதங்கள் அடங்கும்.

விராட் கோலி 318 ஒருநாள் போட்டிகளில் 55 சதம், 80 அரைசதங்களுடன் 15183 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 463 போட்டிகளில் 49 சதம், 96 அரைசதங்களுடன் 18426 ரன்கள் அடித்துள்ளார்.

X