7 For a Reason.. டிரம்ப்- டோனியின் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்

கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த டோனியை டிரம்ப் கோல்ப் விளையாட அழைத்தார்.டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார்.
7 For a Reason.. டிரம்ப்- டோனியின் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்
Published on

அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்ற நிலையில், டோனி- டிரம்ப் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. டோனி கடந்த ஆண்டு அமெரிக்கா சென்றிருந்த போது டோனியை கோல்ப் விளையாட வருமாறு முன்னாள் அதிபர் டிரம்ப் அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று பெட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ப் கிளப்புக்கு டோனி சென்றார்.

அப்போது டிரம்புடன் இணைந்து டோனி சிறிது நேரம் கோல்ப் விளையாடினார். அப்போது இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படத்தை தற்போது மீண்டும் டோனியின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் டோனியின் ஜெர்சி எண்-7 உடன் டிரம்பின் வெற்றியை இணைத்து மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், தேர்தல் நடைபெற்ற நாள் 6-11-2024. 6+1+1+2+2+4= 16, 1+6=7. இந்த காரணத்திற்காக தல என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com