

2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் கோவாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்காக ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில் நடத்தப்பட்டது.
கடந்த 3 சீசன்களில் ஐ.பி.எல். ஏலம் வெளிநாடுகளில் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு ஏலம் துபாயிலும், 2025-ம் ஆண்டு மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலும், 2026-ம் ஆண்டு ஏலம் அபுதாபியிலும் நடைபெற்றது.
இந்நிலையில், 2027 ஐ.பி.எல். ஏலத்தை இந்தியாவின் கோவாவில் நடத்தப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐபிஎல் 2027-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் கோவாவில் நடைபெறும் என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்துள்ளார்.இதன் மூலம் ஐபிஎல் ஏலம் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புகிறது.
அணிகளின் நிர்வாகக் குழுவினர் வெளிநாடு செல்வதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2028-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் வெளிநாட்டில் நடத்தப்பட உள்ளது.