இனிமேல் #CHOKERS பட்டம் நியூசிலாந்துக்குதான் - கொந்தளித்த டேல் ஸ்டெயின்

நெட்டின்சன்கள் தென் ஆப்பிரிக்கா அணியை CHOKERS என்று கிண்டல் அடித்தனர். நியூசிலாந்து ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை.
இனிமேல் #CHOKERS பட்டம் நியூசிலாந்துக்குதான் - கொந்தளித்த டேல் ஸ்டெயின்
Published on

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்கிறது.

இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காத தென் ஆப்பிரிக்கா கட்டாயம் வெற்றி பெற வேண்டிய அரையிறுதியில் தோல்வியடைந்ததால் நெட்டின்சன்கள் தென் ஆப்பிரிக்கா அணியை CHOKERS என்று கிண்டல் அடித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின், "எல்லோரும் தென் ஆப்பிரிக்காவை CHOKERS என அழைக்கின்றனர். ஆனால் நியூசிலாந்து ஒருமுறை கூட உலக கோப்பையை வெல்லவில்லை. எங்களை விட அவர்கள்தான் அதிகமுறை இறுதி போட்டியில் விளையாடி தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

இந்த முறையாவது டி20 உலக கோப்பையை வெல்லுங்கள். இல்லையெனில் CHOKERS என்ற பட்டத்தை உங்களுக்கு கொடுத்து விடுவோம்" என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com