ஆசிய விளையாட்டு: ஷபாலி சதம் - வங்கதேசத்தை சுருட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா

இந்தியாவின் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி சதமடித்து அசத்தினார்.
shafali varma
Published on
Summary

ஆசிய விளையாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா.

ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டின் அரையிறுதி போட்டிகள் ஜப்பானில் நடைபெற்றது.

ஜப்பானின் நிஷின் நகரில் இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஷபாலி அதிரடி சதம்

அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 40 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேச அணி 15.4 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 114 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தீப்தி சர்மா அசத்தல்

இந்தியாவின் தீப்தி சர்மா, நந்தினி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்ரீசரணி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com